நூறு சாமி- விமர்சனம்
20 வயதில் கணவனை இழந்த சுவாசிகா தனது 2 மகன்கள் அஜய் தீசன் மற்றும் சக்தி இருவரையும் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக் குகிறார்.மகன்களும் வளர்ந்து கல்யாண வயசுக்கு வந்த பிறகுதான், அம்மாவுக்கும் ஒரு துணை வேண்டும் என யோசித்து, சுவாசிகாவுக்கு மறுமணம் செய்து வைக்க நினைக்கின்றனர்.அது நடந்ததா? இல்லையா? என்பதை படத்தின் மீதி கதை. கள்ளக்குறிச்சி பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, கணவனை இழந்த பெண்களின் வலியை யும், செய்யாத குற்றத்திற்கு காலம் முழுவதும் தண்டைனைய அனுபவித்து வரும் பல பெண்களின் உணர்வுகளை தனது திரைக்கதை மூலம் அழகாக பிரதிபலித்துள்ளார் இயக்குனர் சசி. அதே நேரம் பட நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். இளவயது விதவையாக, சிங்கிள் மதராக குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் தாயாக சுவாசிக அற்புத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மகன்களாக வரும் அஜய் தீசன், சக்தி மற்றும் காவ்யா அனில், பாடினி குமார், கருணாஸ் மற்றும் லிஜோ மோல் ஜோஸ், முனீஸ் காந்த் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். பாலாஜி ஸ்ரீராம் இசை, தர்ஷன் கிர்லோஷ் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
Prev Post
Next Post
