Take a fresh look at your lifestyle.

எங்கள் தங்கம்- விமர்சனம்

1

எங்கள் தங்கம்- விமர்சனம்
ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த சமந்தா டாக்டரான திகந்த்தை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். பல நாட்கள் கழித்து, தங்கை திருமணத்திற்காக சொந்த ஊருக்கு செல்கின்றனர். அங்கு மாமனார் ஆனந்த், மாமியார் கௌதமி மற்றும் குடும்பத்தினரை கொஞ்சம் கொஞ்சமாக தன் வசப்படுத்தும் சமந்தாவுக்கு அதிர்ச்சி கொடுப்பது போல் சிறையில் உள்ள குல்ஷன் தேவய்யாவின் ஆள், மோப்பம் பிடித்து வர, அவரை சமந்தா கொன்று வீச,குல்ஷன் தேவய்யா நேரடியாக களமிறங்குகிறான். சமந்தாவின் கடந்த காலம் என்ன? தன் குடும்பத்தைக் காப்பாற்ற என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை. ஸ்வர்ணா, ஜான்சி கேரக்டர்களில் சமந்தா மிரட்டியிருக்கிறார். அப்பாவிப் பெண்ணா கவும், ஆக்‌ஷன் ஹீரோயினாகவும் இரண்டு பரிமாணங்களிலும் அசத்தியுள்ளார். அதே போல் ஆனந்த்,திகந்த், குல்ஷன் தேவய்யா, ஸ்ரீமுகி,மஞ்சுஷா,கௌதமி, சைதன்யா கிருஷ்ணா என் அனைவரும் கவனம் ஈர்க்கிறார். குற்றப் பின்னணி கொண்ட ஒரு பெண், தன் கடந்த காலத்தை மறைத்து, ஒரு புதிய வாழ்க்கை வாழும்போது, மீண்டும் அவளது கடந்த காலம் அவளைத் துரத்தும் போது என்ன செய்தார் என்பதை இயக்குனர் நந்தினி ரெட்டி அழகாக இயக்கியுள்ளார். திரைக்கதை ஆங்காங்கே தடுமாறுகிறது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு மற்றும் சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு பெரிய பலம்.