இரட்டிப்பு மகிழ்ச்சியில் குஷ்பு
அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் சந்தோஷ், ரேஷ்மா, வினோத் கிஷன், சம்யுக்தா ஆகிேயார் நடிப்பில் உருவாகியுள்ள படம் டபுள் ஆக்குபன்சி. படத்தை குஷ்புவின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் கிரியேட்டிவ் புரொடியூசராக அவரின் இளைய மகள் அவந்திகா பணியாற்றினார். இப்படம் ரிலீஸ் ஆகி வரவேற்பை பெற்று படம் வெற்றியடைந்துள்ளது. இந்த படத்தின் வெற்றி விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் குஷ்பு கலந்து கொண்டு மகளின் வெற்றியை பாராட்டி பேசினார். அதேபோல் அவரின் மூத்த மகன் அவந்திகா, அட்டாக்கர் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் தாமோ நாக பூஷணம் இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது.தனது மகள்களின் இந்த சக்சஸால் நடிகை குஷ்பூ இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்.
Prev Post