பராகுவே வீரர் மிரட்டல் சாதனை..!
2026 FIFA உலகக் கோப்பை தொடரில் பராகுவே அணியின் நட்சத்திர வீரர் மத்தியாஸ் கலார்சா புதிய வரலாறு படைத்துள்ளார். துருக்கி அணிக்கு எதிரான குரூப் D ஆட்டத்தில் போட்டி தொடங்கிய வெறும் 64-வது வினாடியிலேயே கோல் அடித்த அவர், 2026 FIFA உலகக் கோப்பையின் அதிவேக கோல் சாதனையை தனது பெயரில் பதிவு செய்துள்ளார். இதற்கு முன் அதே நாளில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் மொராக்கோ வீரர் இஸ்மாயில் சைபாரி 70-வது வினாடியில் கோல் அடித்து அதிவேக கோல் சாதனையை படைத்திருந்தார். ஆனால் சில மணி நேரங்களிலேயே கலார்சா அந்த சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். மத்தியாஸ் கலார்சாவின் மின்னல் வேக கோல், பராகுவே அணிக்கு வெற்றியை தேடித்தந்ததோடு உலகக் கோப்பை ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 64-வது வினாடியில் கோல் 2026 உலகக் கோப்பையின் அதிவேக கோல் இஸ்மாயில் சைபாரியின் 70-வினாடி சாதனை முறியடிப்பு பராகுவே அணிக்கு முக்கிய வெற்றி.