மகன் யாத்ராவை இயக்கும் தனுஷ்
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்ட தனுஷ், சமீபத்தில் நடைபெற்ற தனது புதிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மகன் யாத்ராவின் சினிமா அறிமுகம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.அவர் பேசுகையில், “நான் 16 வயதில் சூழ்நிலை காரணமாக நடிக்க வந்தேன். என் மகனுக்கு இப்போது 19 வயது தான். அவனை இன்னும் குழந்தையாகவே பார்க்கிறேன்.அவன் என்ன ஆகப் போகிறான் என்பது இன்னும் தெரிய வில்லை”என தெரிவித்தார்.இதற்கிடையில், தனுஷ் தனது ஐந்தாவது இயக்கத்திற்குத் தயாராகி வருவதாகவும், அதில் மகன் யாத்ராவை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தை ஆர் டேக் ஸ்டுடியோஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்வார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Prev Post