Take a fresh look at your lifestyle.

சூரியின் மண்டாடி படம் செப்டம்பர் 4-ல் ரிலீஸ்

2

சூரியின் மண்டாடி படம் செப்டம்பர் 4-ல் ரிலீஸ்
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி உள்ள படம் மண்டாடி. ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்த படம் கடலோர மக்களின் வாழ்க்கை,பாரம்பரியம், உணர்வுகள் மற்றும் அவர்களின் மன உறுதி யை மையமாக கொண்டு ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமாவாக உருவாகி உள்ளது.படகு பந்தய உலகத்தை பற்றி பிரமிப்பூட்டும் அனுபவத்தை வழங்கும் இந்த கதையில் சூரி மாஸாக நடித்துள்ளார். ஹீரோயினாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன்,பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 4-ந் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.