Take a fresh look at your lifestyle.

ஜெயிலர் 2 படத்தில் ஹிருத்திக் ரோஷன்

1

ஜெயிலர் 2 படத்தில் ஹிருத்திக் ரோஷன்
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர் 2. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், மிதுன் சக்ரவர்த்தி, எஸ்.ஜெ. சூர்யா உள்பட பலர் நடித்துள்ளனர்.இதில் சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நடிக்கும் கிங் படப்பிடிப்பு முடியாததால் இந்தப் படத்தில் அவரால் நடிக்க முடிய வில்லை. இதைத்தொடர்ந்து அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருக்கிறார். அவர் நடிக்க இருக்கும் காட்சிகள் இந்த மாத இறுதியில் சென்னையில் படமாக்கப்பட உள்ளன. ரஜினியும் ஹிருத்திக் ரோஷனும் 40 ஆண்டுகளுக்கு முன்பு 1986 ஆம் ஆண்டு வெளியான பகவான் தாதா என்ற படத்தில் நடித்துள்ளனர். அதில் ரஜினியின் வளர்ப்பு மகனாக ஹிருத்திக் ரோஷன் நடித்திருந்தா ர்.அதற்கு முன்பு பல படங்களில் ஹிருத்திக் நடித்திருந்தாலும் இந்தப் படத்துக்கு பிறகு தான் அவர் பிரபலமானார். செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.