ஆரி அர்ஜுனனின் பகவான் டீசர்
இயக்குனர் காளிங்கன் இயக்கத்தில், ஆரி அர்ஜுன் நடித்துள்ள படம் பகவான். இந்த படத்தை அம்மன்யா மூவிஸ் நிறுவனம் சார்பில் சி.வி. மஞ்சுநாதா தயாரித்துள்ளார். படத்திற்கு பிரசன் பாலா ஒளிப்பதிவு செய்ய, யுவராஜ் இசையமைத்துள்ளார். வித்தியாச மான கதை காலத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை செவன்த் ஸ்டுடியோ நிறுவனம் பெரிய விலைக்கு கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது. இதில் ஆரி அர்ஜுன் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ள்ளது.
Prev Post
Next Post