Take a fresh look at your lifestyle.

கீது மோகன் தாஸ் பிறந்தநாளில் வெளியா ‘டாக்ஸிக்’ கிளிம்ஸ்

2

கீது மோகன் தாஸ் பிறந்தநாளில் வெளியா ‘டாக்ஸிக்’ கிளிம்ஸ்
பிரபல நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘டாக்ஸிக்’ படக் குழுவினர் ஒரு பிரத்யேக படப்பிடிப்பு தள காணொலியை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து கூறியுள்ளனர். தற்போது யாஷ் நடிப்பில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக உருவாகி வரும் டாக்ஸிக் படத்தை அவர் இயக்கி வருகிறார். இதில் ஹீரோயின்களாக நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த் , தாரா சுதாரியா ஆகியோர் நடிக்கிறார்கள். கே. வி. என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இயக்குனர் கீது மோகன்தாசின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட கிளிம்ஸ் வீடியோவில் ஒரு இயக்குநரின் செயல்பாடுகளை பறைசாற்றுகிறது.