Take a fresh look at your lifestyle.

சத்திய சோதனையைப் பேசும் ‘ப்ராமிஸ் ‘

2

சத்திய சோதனையைப் பேசும் ‘ப்ராமிஸ் ‘
அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் மற்றும் சங்கமித்ரன் புரொடக்‌ஷன் இணைந்து தயாரிக்க, என்.நாகராஜ் வழங்கும் படம் ‘ப்ராமிஸ்’. சத்தியத்தின் சக்தியை மையமாக கொண்டு உருவாகி உள்ள இப்படத்தை இயக்குவதுடன், ஹீரோவாகவும் நடித்துள்ளார் அருண்குமார். ஹீரோயினாக நதிஷோமி நடிக்க, மேலும் சுஜன், அம்ரிஷ்,பிரதாப், கோகுல், சுந்தரவேல் உள்பட பலர் நடித்து உள்ளனர். படத்திற்கு சரவணா தீபன் இசை அமைத்துள்ளார். வரும் 26-ந் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் சத்தியத்தின் சோதனையை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எதிர் கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு சோதனையை கதாநாயகன் எதிர் கொள்ளும் தருணங்கள் படத்தின் மையக்கரு. இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் சேரனும்,ஒளிப்பதிவாளர்,
நடிகர் நட்டியும் வெளியிட்டுள்ளனர்.