Take a fresh look at your lifestyle.

விஜய் சேதுபதி நடிப்பை பார்ப்பதே அழகு: சம்யுக்தா மேனன்

1

விஜய் சேதுபதி நடிப்பை பார்ப்பதே அழகு: சம்யுக்தா மேனன்
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘ஸ்லம் டாக்-33 டெம்பிள் ரோடு’. இதில் ஹீரோயினாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும் தபு, நிவேதா தாமஸ், துனியா விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு,கன்னடம்,
மலையாளம், இந்தி என 5 மொழிகளில் படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.விழாவில் நடிகை சம்யுக்தா மேனன் பேசியது, ‘ இயக்குனர் பூரி ஜெகன்நாத் டைரக்‌ஷன் பண்ணுவதே ஒரு அழகு. தனக்கு தேவையானதை மட்டுமே ஷூட் செய்வார். அதோடு படப்பிடிப்பை சீக்கிரமே முடிப்பதுதான் அவரது ஸ்டைல்.என் கேரக்டர் மிகவும் அழகு. நான் இதுவரை இது போன்ற கேரக்டரில் நடித்ததில்லை. விஜய் சேதுபதி நடிப்பை பார்ப்பதே அழகு. அவருடன் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும்
நடிகர்களில் அவரும் ஒருவர்.அவர் நடிப்பதை நான் ரொம்ப ரசித்து பார்த்திருக்கிறேன். கேரக்டருக்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொள்வார். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டியது உள்ளது என்றார்.