Take a fresh look at your lifestyle.

“ தத் த்வம் அஸி” பட ஷூட்டிங் துவக்கி வைத்த வெங்கட் பிரபு

81

“ தத் த்வம் அஸி” பட ஷூட்டிங் துவக்கி வைத்த வெங்கட் பிரபு
மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற “மாளிகப்புரம்” படத்தின் இயக்குநர் விஷ்ணு சசி சங்கர், அடுத்ததாக இயக்க உள்ள படம் “தத் த்வம் அஸி”. இந்த படத்தை தந்த்ரா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜேகே. சரவணா மற்றும் ஜேகே.சதீஷ் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் லீட் ரோலில் நடிக்க, அரவிந்த் ஆகாஷ்,ஆடுகளம் நரேன் உட்பட பலரும் நடிக்கின்றனர். ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்சன் கலந்த படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பை இயக்குநர் வெங்கட் பிரபு கிளாப் அடித்து துவக்கி வைத்தார். இயக்குநர் பொன்ராம் கேமராவை ஆன் செய்து படக்குழுவை வாழ்த்தினார். இந்த படத்தின் ஒளிப்பதிவை யுவன் செல்வா கவனிக்க, பிரேம் ஜி அமரன் இசை அமைக்கிறார்.