ராணுவ அதிகாரியாக நடிக்கும் சசிகுமார்
‘யாத்திசை’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். ஜே.கே. பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜே. கமலகண்ணன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சசிகுமார்,ராணுவ அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இதில் சமுத்திரக்கனி, கிஷோர், சேயோன், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.நடிகர் அசோக் செல்வன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்ய, சார்தக் கல்யாணி இசையமைத்து ள்ளார்.
Next Post