Take a fresh look at your lifestyle.

சர்தார் – 2, மார்ஷல் படங்களின் ஃபர்ஸ்ட் லுக்

84

சர்தார் – 2, மார்ஷல் படங்களின் ஃபர்ஸ்ட் லுக்
நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக உள்ள படம் சர்தார் – 2 .இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இதில், எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஜூலை மாதம் வெளியிட பட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன் தினம் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதேபோல் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் மார்ஷல் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அவரின் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியிடப்பட்டது.