Take a fresh look at your lifestyle.

உடல் எடையை குறைக்க ஜான்வி சொன்ன டிப்ஸ்

9

உடல் எடையை குறைக்க ஜான்வி சொன்ன டிப்ஸ்
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பெத்தி. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்க, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்துள்ளார். இப்படம் ஜூன் 4ம் தேதி வெளியாகிறது.இதை ஒட்டி பெங்களூருவில் நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூர் பேசியது, ‘உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் ராம்சரணுடன் ஒரு பாடலுக்கு நடனமாடி பாருங்கள், டயட், ஜிம் எதுவுமே தேவையில்லை உடல் எடை தானாக குறைந்து விடும். அதேபோல் சிவராஜ்குமாரின் கண்கள்’ சக்தி வாய்ந்தது. அவரது கண்கள் ‘ஏ.கே 47 துப்பாக்கி’ போல் இருக்கும் என்றார்.