Take a fresh look at your lifestyle.

திருமணம் பற்றி ஆண்ட்ரியா பளிச் பதில்

51

திருமணம் பற்றி ஆண்ட்ரியா பளிச் பதில்
திருமணம் குறித்து நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியது, நான் திருமணம் செய்து கொள்ளாமல் மகிழ்ச்சியாக தானே இருக்கிறேன். ஒரு கட்டத்தில் எனக்கும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று பெரிய அழுத்தம் இருந்தது. 30 வயது கடந்த போது இன்னும் திருமணம் ஆகவில்லையே என்ற பயம் இருந்தது.சில மாப்பிள்ளைகளை சந்தித்து பேசக்கூட செய்து இருக்கிறேன்.ஆனால் 2 ஆண்டுகளில் திருமணத்தை வேறு கோணத் தில் புரிந்து கொண்டேன். திருமணம் செய்து கொண்டு எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? என்றால் இல்லை. திருமணம் செய்யாமல் இருப்பவர்கள் கூட மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். கல்யாணம் என்பது கட்டாயப்படுத்தி நடக்கக்கூடாது, அதற்கான நேரம் வந்தால் தானாகவே நடக்கும் என்றார்.