Take a fresh look at your lifestyle.

திரிஷாவுக்கு கிடைத்த பர்த்டே கிப்ட்

33

திரிஷாவுக்கு கிடைத்த பர்த்டே கிப்ட்
நடிகை திரிஷா தனது 42-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவையில் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த திரிஷாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தரிசனம் முடிந்து வெளியே வந்த அவருக்கு ரசிகர்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். சில ரசிகர்கள் அவரிடம், இன்று தேர்தல் முடிவுகள். வெற்றி நமதே என்று கோஷம் எழுப்பினர். திருப்பதியில் இருந்து சென்னை திரும்பிய திரிஷா விஜய் வீட்டுக்கு சென்று அவரிடம் வாழ்த்து பெற்றார். திரிஷாவுக்கு பிறந்தநாள் பரிசாக அவர் நடித்துள்ள கருப்பு படத்தில் இருந்து சிறப்பு போஸ்டர் வெளியிட்டு பட குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.