ஜிவி பிரகாஷ்யை பாராட்டிய வசந்த பாலன்
காந்திகிருஷ்ணா இயக்கி உள்ள படம் ‘பிரேக் பாஸ்ட்’.இதில் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார்,கிருத்திக்மோகன், அமித்தா ரங்கநாத் உள்பட பலர் நடித்துள்ளனர். கிரிஜா வரதராஜ், தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து உள்ளார்.வரும் 24-ந் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதை ஒட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.இதில் கவிஞர் வைரமுத்து,நடிகர்கள் பரத், ரியோராஜ்,மைம் கோபி,டைரக்டர் வசந்தபாலன் உள்பட படக் குழுவினர் பங்கேற்றனர். விழாவில் வசந்த பாலன் பேசியது, எனது முதல் படத்திற்கு இசையமைத்தவர் ஜிவி பிரகாஷ். 20 ஆண்டு
ஆகியும் இன்றும் அதே துடிப்புடன் உள்ளார். தற்போது டாப் மியூசிக் டைரக்டராக இருக்கும் அவர், இது போன்ற அறிமுக நடிகர் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதுதான் அவரின் நல்ல குணம். அவரைத் தவிர வேறு யாரும் இதற்கு முன் வர மாட்டார்கள் என்றார்.
Prev Post