Take a fresh look at your lifestyle.

தனுஷ் இயக்கத்தில் மிருணாள் தாக்கூர்

95

தனுஷ் இயக்கத்தில் மிருணாள் தாக்கூர்
நடிகர் தனுஷ் தனது வொண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் ஒரு வரலாற்று படத்தை இயக்க இருக்கிறார். 1960-70 கால கட்டத்தில் நடக்கும் பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இந்த படம் தயாராகிறது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் மிருணாள் தாக்கூர் நடிக்க இருக்கிறார். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்து, சிறப்பு போட்டோ சூட்டும் எடுத்து முடிக்கப்பட்டு உள்ளது. விரைவில் ஷூட்டிங் துவங்க உள்ளது. சமீபகாலமாக தனுஷ், மிருணாள் தாக்கூர் இருவரும் காதலிப்பதாக செய்தி வெளியான நிலையில் இவர்கள் இணைந்து இருப்பது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள கர படம் வரும் 30-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.