Take a fresh look at your lifestyle.

மிஸ்டர் எக்ஸ் கதை, துரந்தர் பட கதையா?இயக்குநர் மனு ஆனந்த் விளக்கம்

7

மிஸ்டர் எக்ஸ் கதை, துரந்தர் பட கதையா?இயக்குநர் மனு ஆனந்த் விளக்கம்
மனு ஆனந்த் இயக்கத்தில்,ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் நடித்துள்ள படம் மிஸ்டர் எக்ஸ்’.பிரின்ஸ் பிக்சர்ஸ் லஷ்மன்குமார் மற்றும் மேவரிக் மூவிஸ் வினீத் ஜெயின் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் 17ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.இதில் மனு ஆனந்த் பேசியது, இந்தியாவில் வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெற்ற ஏழு உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி உள்ளது. ஆனால் இது துரந்தர் படத்தைப் போல இருக்கிறது என்று ஒரு பேச்சு உருவாகி உள்ளது. துரந்தரையும் இதையும் ஒப்பிட வேண்டாம். இது துரந்தர் அல்ல. இரண்டு படங்களிலுமே உண்மையை எடுத்து படமாக்கி இருக்கிறோம் என்பதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை என்றார்.