ஜன நாயகன் படம் லீக்: திரையுலகம் அதிர்ச்சி
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜன நாயகன் படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ளார். பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 9 ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனையால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினரும் விஜய் ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்த ஜன நாயகன் திரைப்படத்தை யாரும் பகிர வேண்டாம் என்று இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளார். படம் லீக் ஆனதை கண்டித்து நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஷால், ஜீவா, தயாரிப்பாளர் கேயார் உள்ளிட்ட பலர் அறிக்கை விட்டுள்ளனர்.