Take a fresh look at your lifestyle.

காளிதாஸ் 2-விமர்சனம்

3

காளிதாஸ் 2-விமர்சனம்
அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அனந்த்நாக், அபர்னதி தம்பதியினரின் குழந்தை, புத்தாண்டு கொண்டாட்டத்தின் நடுவே திடீரென காணாமல் போகிறது. குழந்தையை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸ் அதிகாரிகளான பரத் மற்றும் பவானி ஈடுபடுகின்றனர்.விசாரணையின் போது பல தடுக்கிடும் சம்பவம் நடக்கிறது. அது என்ன?காணாமல் போன குழந்தையின் நிலை என்ன? என்பதே படத்தின் மீதி கதை. போலீஸ் கேரக்டரில் பரத் மிடுக்காக நடித்துள்ளார். அவருக்கு ஈடுகொடுத்து மற்றொரு ஹீரோ அஜய் கார்த்தி நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கம் பேக் கொடுத்துள்ள சங்கீதா ஆக்டிங் சிறப்பு. பவானி ஸ்ரீ,அபர்நதி,அனந்தநாக், பிரகாஷ் ராஜ், கிஷோர் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம். சிறு சிறு சம்பவங்களை நுட்பமாக இணைத்து, படத்தை முழுக்க விறுவிறுப்பாக நகர்த்தி உள்ளார் இயக்குனர் ஸ்ரீ செந்தில்.சுரேஷ் பாலா ஒளிப்பதிவு மற்றும் சாம் சி.எஸ் இசை சிறப்பு.