Take a fresh look at your lifestyle.

பிரியாவாக மாறிய ஷ்ரீதா ராவ்

3

பிரியாவாக மாறிய ஷ்ரீதா ராவ்
சத்ய ஜோதி பிலிம்ஸ் டி. ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “லெனின் பாண்டியன்” .இந்த திரைப்படத்தை டி. டி. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் நடிக்க,ஷ்ரீதா ராவ் ஹீரோயினாக நடித்துள்ளார். இதில் பிரியா என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ளார். அவரின் பஸ்ட் லுக்கை பட குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இதில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கங்கை அமரன் மற்றும் ரோஜா நடித்துள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, எட்வின் சக்காய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.