ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லயாம் !!
பிரபல நடிகையான ஐஸ்வர்யா லட்சுமிக்கு 34 வயதாகும் நிலையில் இன்னும்திருமணம் செய்யவில்லை. இந்த நிலையில் ஒருநிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் திருமணம் குறித்து பேசும் போது, ‘என் 34 ஆண்டு வாழ்க்கையில் பல திருமணங்களை நான் பார்த்துள்ளேன். அதில் மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகள் குறைவு. இதனால் திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. காலப்போக்கில் வாழ்க்கைக்கு திருமணம் அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்தேன். வாழ்க்கை துணை வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் திருமணத்தில் நிம்மதி இல்லாத ஒரு நிலை வரக்கூடாது. அதனால் திருமணம் செய்து கொள்ளாமல் உறவில் இருப்பதே நல்லது. இந்த நிலைப் பாடு காதலுக்கு எதிரானது அல்ல எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டிங்காகி வருகிறது.
Prev Post