வெஞ்ஜென்ஸ் -விமர்சனம்
சிறுவயது முதலே அனைவரும் தன்னைப் பற்றி புகழ்ந்து பேச வேண்டும் என்ற ஆசை யோடு வளரும் அபர்ணதி. அந்த இலக்கைஅடைய கடுமையாக உழைத்து கலெக்டர் ஆகிறார்.பொறுப்பேற்ற பிறகு அதிகாரத்தை பயன்படுத்த தொடங்குகிறார். அவரின் இந்த வளர்ச்சி சில அரசியல் வாதிகளுக்கு பெரும் தலைவலியாக மாறுகிறது. அவரை கலெக்டர் பதவியில் இருந்து அகற்ற திட்டம் தீட்டப்படுகிறது. சதி மற்றும் சூழ்ச்சியில் சிக்கிக்கொள்ளும் அபர்ணதி அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதே படத்தின் மீதி கதை.அறம் பட நயன்தாரா ஸ்டைலில் மொத்த கதையையும் தன் தோள்களில் சுமக்கிறார் அபர்ணதி. காளி வெங்கட், லிவிங்ஸ்டன், ஒய்.ஜி.மகேந்திரன், இளவரசு,ஜான்விஜய்,
சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சிறுமி சம்யுக்தா ஆகியோர் கதைக்கு வலு சேர்த்துள்ளனர். அரசியலும், அதிகாரமும் மோதும் கதையை மையமாக வைத்து தைரியமான பெண் அதிகாரியின் போராட்டத்தை காட்டியுள்ளார் இயக்குனர் ராகுல் அசோக்.கார்த்திக் ராஜா இசை,எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.