🦉சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் இதுவரை 12,000 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார். பொதுமக்கள் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் முன்கூட்டியே முன்பதிவு செய்வதைத் (Panic booking) தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், சிலிண்டர் முன்பதிவுக்கு ஆன்லைன் முறையைப் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது மற்றும் எளிதானது என்றும் அறிவுறுத்தியுள்ளார்; அரசின் இந்த அதிரடி சோதனைகள் மூலம் சிலிண்டர் பதுக்கல் தடுக்கப்படுவதால், தகுதியுள்ள நுகர்வோருக்குத் தடையின்றி எரிவாயு கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.