காட்டான் டிரெய்லர் குறித்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி
நடிகர் விஜய்சேதுபதியின் துண்டிக்கப்பட்ட தலையை வைத்து டீசரை வெளியிட்டு இணையத்தை பரபரப்பாக் கிய காட்டான் குழுவினர் தற்போது டிரெய்லரை வெளியிட்டு மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளனர்.
விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இதில்,மிலிந்த் சோமன், சுதேவ்நாயர், மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் மணிகண்டன் இயக்கியுள்ள இந்த வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் வரும் 27-ந் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படம் குறித்து விஜய் சேதுபதி கூறியது, என்னிடம் ‘மணிகண்டன் முதலில் காட்டான் கதையை எனக்கு சொன்ன போது 6 பக்கங்களைக் கொண்ட ஒரு சுருக்கக் குறிப்பை பகிர்ந்தார். அவர் கற்பனை செய்த கதாபாத்திரமும் அதன் உலகமும் என்னை உடனே ஈர்த்து விட்டது. இதில் பணியாற்றியது ஒரு நடிகராக எனக்கு உண்மையான மன நிறைவை அளித்தது என கூறினார்.
Prev Post