ஸ்டார் ஜோடியை வாழ்த்திய நட்சத்திரங்கள்
தெலுங்கு சினிமாவின் நட்சத்திர ஜோடி விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா திருமணம் கடந்த 26-ந் தேதி உதய்ப்பூரில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர்.இதை தொடர்ந்து இருவரது திருமண வரவேற்பு விழா கடந்த 4-ம் தேதி ஐதராபாத்தில்
பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர். இதில் தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜூனா, அமலா, வெங்கடேஷ்,நானி, ஸ்ரீகாந்த், அவரது மனைவி சிவரஞ்சனி, ராம்சரண், அல்லு
அர்ஜூன், ராணா, நவீன் பொலி ஷெட்டி, ரவி தேஜா, நாகசைதன்யா, நடிகைகள் கிருத்தி ஷெட்டி, ஸ்ரீலீலா,மிருணாள் தாக்கூர் தமிழ் திரையுலகம் சார்பில் சரத்குமார்,ராதிகா,
கார்த்தி உள்பட ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.விருந்தினர்களுக்கு நூற்றுக்கணக்கான சைவ மற்றும் அசைவ உணவுகள் விதவிதமாக பரிமாறப்பட்டது.
