ஐஸ்வர்யா இயக்கத்தில் ஜெய் நடிக்கும் ‘டெக்ஸ்லா’ படம் துவக்கம்
கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் – சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் உருவாக உள்ள ‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி,இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் பாலா, தயாரிப்பாளர்கள் சுஜாதா விஜயகுமார், ஜி.கே.எம். தமிழ் குமரன், அம்மா கிரியேஷன் சிவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் தமிழ் திரையுலகில் பிரபலமான முன்னணி தயாரிப்பாளர்களும், நட்சத்திர நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும், விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Next Post