Take a fresh look at your lifestyle.

கௌதம் ராம் கார்த்திக்கின் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’

62

கௌதம் ராம் கார்த்திக்கின் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’
இயக்குநர் தீனா ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ப்ளடி பாலிடிக்ஸ் படத்தில் கெளதம் ராம் கார்த்திக் நடிக்க, அவருக்கு ஜோடியாக அஞ்சனா நேத்ருன் நடித்துள்ளா ர். மேலும் மூத்த நடிகர் ஜெயபாலன், பி.வாசு, செல்வராகவன்,ரோபி, ஏ.வெங்கடேஷ், மாறன், இந்துமதி, ஆதித்யா கதிர், பாக்கியம் சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டாடா பட இயக்குனர் கணேஷ் கே.பாபு தனது தயாரிப்பு நிறுவனமான டிராப்ட் பை ஜிகேபி மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். வசனங்களை இயக்குனர் ராஜமுருகன் எழுதியுள்ளார்.இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணாதுரை முதல் நடிகர் விஜய் வரை உள்ள தமிழக அரசியல் இந்த டீசரில் வசனமாக இடம் பெற்றுள்ளது.