உறியடி விஜய்குமார், கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு”
கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிக்கத்தில், உறியடி மூலம் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி இணையும் புதிய திரைப்படமான அறிவு படத்தின், படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது. இந்தப் படத்தை மூவி ட்ரான்புரொடக்ஷன் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிக்கிறார். பெண் உரிமைகளை மையமாக கொண்டு வலுவான சமூகச் செய்தியுடன் உருவாகும்இந்தப் படத்தில் விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இமான் இசையமைக்க, தில் ராஜு ஒளிப்பதிவு செய்கிறார்