Take a fresh look at your lifestyle.

தீபிகாவுக்கு பதில் சாய் பல்லவி

85

தீபிகாவுக்கு பதில் சாய் பல்லவி
பிரபல தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘கல்கி 2898 ஏ.டி’. இதில் தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்த முக்கிய கேரக்டர்களில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி, கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் நடித்திருந்தனர். இதன் 2-ம் பாகம் ‘கல்கி 2’ என்ற பெயரில் தயாராகி வருகிறது.முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்திருந்த தீபிகா படுகாேனே,இதிலிருந்து விலகினார். டபுள் கால்ஷீட் மற்றும் சம்பள பிரச்சனை காரணமாக அவர் விலகியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தீபிகா கேரக்டரில் நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏற்கனவே பான் இந்தியா அளவில் உருவாகும் ராமாயணம் படத்திலும் சாய் பல்லவி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.