Take a fresh look at your lifestyle.

விருதை விட மக்களின் அன்பு தான் பெரிது: உண்மையை உடைத்த சினேகா

86

விருதை விட மக்களின் அன்பு தான் பெரிது: உண்மையை உடைத்த சினேகா
சென்னையில் நடந்த அவள் ஐகான் விருது வழங்கும் விழாவில் நடிகை சினேகாவிற்கு கரு பழனியப்பன் விருது வழங்கினார். விழாவில் பேசிய சினேகா, சினிமாவிற்கு வந்த புதிதில் ஒரு விபத்தில் சிக்கினேன். நான் எழுந்து நடக்கவே 8 மாதத்திற்கு மேல்ஆகும் என்றனர். அந்த நேரத்தில் பார்த்திபன் கனவு கதையை கரு பழனியப்பன் என்னிடம் கூறி விட்டு இன்னும் ஒரு மாதத்தில் நடந்து விடுவீர்கள் என்றார். அவர் கொடுத்த நம்பிக்கையில் 1½ மாதத்தில் பார்த்திபன் கனவு படத்தில் நடித்தேன். அந்த படத்தில் நடித்த எல்லோருக்கும் விருது கிடைத்தது. எனக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளது வில்லையே என மிகவும் வருத்தப்பட்டேன். அந்த படம் மட்டுமல்ல,ஆட்டோகிராப்,
பள்ளிக் கூடம் பட்டாசு என நான் நடித்த எந்த படத்திற்கும் எனக்கு விருது கிடைக்கவில் லை.பின்னர் அதுவே பழகி விட்டது. விருதை விட மக்களின் மனதில் இடம் பிடிப்பது தான் முக்கியம் என்றார்.