“எல் எஸ் எஸ்” விமர்சனம்
சென்னையில் கல்லூரியில் படித்து வரும் ஆதவ் கிருஷ் ணாவுக்கும் வடமாநிலத்தை
சேர்ந்த சிம்ரன் அத்வானி க்கும் இடையே மலரும் நட்பு காதலாகிறது. ஆதவ்வின் பெற்றோர் படவா கோபி, வினோதினி காதலுக்கு ஆதரவாக நிற்க,சிம்ரனின்பணக்கார தந்தை கடுமையாக எதிர்க்கிறார். இதற்கு நடுவில்,சிறுவயதில் விட்டு சென்ற தாயை தேடி செல்லும் சிம்ரன், காதலன் ஆதவ்வையும் உடன் அழைத்துச் செல்கிறார்.
வாரணாசியில் தாயைத் தேடும் போது சிம்ரன் திடீரென காணாமல் போக, அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதி கதை.தமிழ் மண்ணில் வளரும் ஒரு இளம் காதல்,
வடமாநில மண்ணில் உயிர் போராட்டமாக மாறினால்? என்னவாகும் என்பதை இந்த கதை மூலம் சுவாரஸ்யமாகசொல்லி உள்ளார் இயக்குனர் மகாலட்சுமி முருகன். ஆதவ் கிருஷ்ணா முதல் படத்திலேயே சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி யுள்ளார். சிம்ரன் அத்வானி கதைக்கு ஏற்றவாறு நடித்துள்ளார்.அஸ்வமித்ரா இசை மற்றும் சதீஷ்குமார் ஒளிப்பதிவு ஓகே ரகம்.