Take a fresh look at your lifestyle.

எஸ்கேவுக்கு அம்மாவாக நடிக்கும் ரம்யா நம்பீசன்

149

எஸ்கேவுக்கு அம்மாவாக நடிக்கும் ரம்யா நம்பீசன்
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படம் சேயோன். இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கம் டைம் டிராவல் படத்தில் சிவகார்த்திகேயன் அப்பா மகன் என இரண்டு கேரக்டரில் நடிக்க உள்ளார். இதில் அப்பா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 41 வயதான சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக 39 வயதான ரம்யா நம்பீசன் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.