படத்துக்கு டைட்டிலே இதுதானா!!
சினிமாவில் அதிக அளவில் வன்முறையோ, கவர்ச்சியோ இருந்தால் அந்த படத்துக்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் வழங்கும். ஆனால் இயக்குனர் கேஷ்லெஸ் ஷிவாகோ இயக்கியுள்ள படத்துக்கு ஏ படம் என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தை மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜ கணபதி தயாரிக்க,ஜோஸ் பிராங்கிளின் இசை அமைத்துள்ளார். சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் ராஜகணபதி கதையின் நாயகனாக நடிக்க,மேகா ஸ்ரீ மஸ்காரா அஸ்மிதா, சுஷ்மிதா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் சந்திர போஸ், இயக்குனர் கேஷ்லெஸ் ஷிவாகோ நடித்துள்ளனர், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஏலகிரி மற்றும் ஏற்காடு பகுதியில் நடைபெற்று முடிந்து, மார்ச் மாதம் 27 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரைலரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டார்.