27-ம் தேதி முதல் சமுத்திரகனியின் ‘தடயம்’ வெப் சீரிஸ்
நவீன்குமார் பழனிவேல் இயக்கத்தில், நடிகர் சமுத்திரகனி லீட் ரோலில் நடித்துள்ள க்ரைம் த்ரில்லரான ‘தடயம்’ வெப் சீரிஸ் வரும் 27 ம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.ஜீ5 ஓடிடி தளத்தில் அடுத்த தமிழ் ஒரிஜினல் சீரிஸான வெளியாக உள்ள இந்த ‘தடயம்’, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதியில் 1999ஆம் ஆண்டு நிகழ்ந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு அதிர்வூட்டும் க்ரைம் த்ரில்லராக இது உருவாகியுள்ளது.