புதிய கெட்டப்பில் மஹத் ராகவேந்திரா
தமிழ் சினிமாவில் ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு நடிகர் மஹத் ராகவேந்திரா மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். ஆளே மாறிப்போய் புதிய கெட்டப்பில் இருக்கும் அவர் தற்போது டி.ஜி. தியாகராஜனின் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது மஹத் ராகவேந்திரா தெலுங்கு மொழியில் உருவாகும் “பகாசல பந்தம்”படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் மஹத் ஸ்வர்யா ராஜேஷ், ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
Next Post
