Take a fresh look at your lifestyle.

இயக்குனர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள்

144

இயக்குனர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள்
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் கடந்த 15ம் தேதி நடைபெற்றது.இதில் தலைவராக ஆர்.கே. செல்வமணி, துணைத் தலைவர்களாக பி.வாசு,கே.எஸ். ரவிக்குமார், பொதுச் செயலாளரக ஆர்.வி. உதயகுமார், பொருளாளராக பேரரசு ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டனர். மேலும் இணைச் செயலாளராக எஸ். எழில்,சரண்,சுந்தர்.சி, என்.ஏகம்பவா ணன் ஏ.கே.நம்பிரா ஜன் (எ) நம்பி ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்களோடு ஆர். அரவிந்தராஜ்,என்.லிங்குசாமி,மாதேஷ், மனோஜ்குமார், ஏ.ஆர். முருகதாஸ், சி.ரங்கநாதன், எஸ்.ரவிமரியா, ஷரவணன் சுப்பையா, ஏ.வெங்கடேஷ், வெங்கட்பிரபு, அசோக் அண்ணாமலை, இந்திரா கிளாரா,ஆர்.கே.கண்ணன்,முத்துவடுகு, தி.ரமேஷ் பிரபாகரன், சாய் ராம்கி, சுப்ரமணியபாரதி ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.