Take a fresh look at your lifestyle.

’சிக்னல் அட் 11.30’ படத்தின் பர்ஸ்ட் லுக்

136

’சிக்னல் அட் 11.30’ படத்தின் பர்ஸ்ட் லுக்
’காலம் யாருக்காகவும் காத்திருக்காது’ என்ற பழமொழி அனைவரது வாழ்வுடனும் ஒத்துப் போகும் ஒன்று. இதனை அடிப்படையாகக் கொண்டு உருவான விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம் தான் ‘சிக்னல் அட் 11.30’. அலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் ஹீரோவாக நடித்துள்ளார். உணர்வுப்பூர்வமாகவும் தீவிரமான கதைக்களத்துடனும் உருவான இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.இதில் பவ்யா திரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு டி. இமான் இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவை செய்திருக்கிறார்.