Take a fresh look at your lifestyle.

லவ் ஸ்டோரி’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

174

லவ் ஸ்டோரி’ படத்தின் டிரெய்லர் வெளியீடு
நாட்டுப்பற்றுள்ள ஒரு கதையுடன் தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகி இருக்கும் கமாண்டோவின் ‘லவ் ஸ்டோரி’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பரணி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இப்படத்தின் கதையை எழுதி இயக்கியதுடன் நாயகனாகவும் நடித்துள்ளார் வீர அன்பரசு. நாயகியாக ஏஞ்சல் நடித்துள்ளார்.இவர்களுடன் பப்லு என்கிற பிருத்விராஜ், இயக்குநர் பேரரசு, ஆகாஷ்,ஜானகி, தங்கதுரைப்பாண்டியன் போன்றவர்களும் நடித்துள்ளார்கள். படத்திற்கு வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, பாவலர் வி .சிவராமன், கார்த்திக்ராஜா ஆகியோர் இசையமைத்துள்ளனர். படத்தை அனுராதா அன்பரசு தயாரித்துள்ளார். இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, இயக்குனர் பேரரசு ஆகியோருடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.