ஆரி அர்ஜுனனின்“4த் ஃப்ளோர்” ட்ரெய்லர் வெளியீடு
இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் நடித்துள்ள படம் “4த் ஃப்ளோர்”. இப்படத்தை மனோ கிரியேஷன் சார்பில் ஏ.ராஜா தயாரித்துள்ளார். வித்தியாசமான கதை களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள இப்படம், வரும் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதன் டிரெய்லரை விஜய் சேதுபதி, ஆர்யா, பா. ரஞ்சித், விஜய் ஆண்டனி ஆகியோர் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டனர்.இதில் தீப்ஷிகா ஹீரோயினாக நடிக்கிறார்.மேலும் பவித்ரா,சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் சென்சார் செய்யப்பட்டு யூ ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Prev Post
