அழகு ரகசியம் சொன்ன ஹன்சிகா
முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானி திருமணத்துக்கு பிறகும் அழகு குறையாமல் இருக்கிறார். அவரது அழகு ரகசியம் குறித்து அவர் கூறியது, “நான் டயட்டில் இல்லை. பை லேட்ஸ் என்ற ஒரு வகை உடற்பயிற்சியை செய்து வருகிறேன். இது முக்கியமாக வயிறு இடுப்பு மற்றும் முதுகு தசைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாமல் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.எனக்கு இது நிலையான
பயிற்சியாகும். முழு உடலையும் நகர்த்தும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன்.அதேபோல் யோகா செய்வது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று” என்றார்.
Prev Post
