Take a fresh look at your lifestyle.

பாலிவுட்ல மரியாதை இருக்காது: நடிகை ரகுல் ப்ரீத் சிங் வேதனை

101

பாலிவுட்ல மரியாதை இருக்காது: நடிகை ரகுல் ப்ரீத் சிங் வேதனை
பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங், தனது பாலிவுட் அனுபவம் குறித்து கூறியதாவது,
நான் தெலுங்கில் பெரிய நடிகையாக இருந்த போதிலும் பாலிவுட்டில் அறிமுகமான போது என்னை ஒரு புதிய நடிகையாக தான் பார்த்தார்கள். பூஜ்யத்தில் இருந்து தொடங்க வேண்டியதிருந்தது.
வெளியாட்கள் என்பதால் சிவப்பு கம்பள விரிப்புகள் கிடைக்காது. நடிகர்கள், இயக்குநர்களுக்கு போன் செய்தால் எடுக்க கூட மாட்டார்கள். அப்படியே எடுத்தாலும் அலட்சியமாகதான் பதிலளிப்பார்கள். ஒரு படத்தின் ஆடிஷனுக்காக அலுவலகம் ஒன்றில் மணிக்கணக்கில் காத்திருந்தேன். இது போன்ற சம்பவங்கள் எனக்கு மன உறுதியை தந்தது என்றார்.