வங்காள விரிகுடா -விமர்சனம்
தூத்துக்குடியில் பெரிய செல்வந்தரான குகன் சக்கவர்த்தி அப்பகுதி மக்களால் அண்ணாச்சி என அழைக்கப்படுகிறார். மனைவி காதலி என இரண்டு பேருடன் குடும்பம் நடத்தும் அவருக்கு அப்பகுதி அமைச்சர் மூலம் எம்பி பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வருகிறது. இந்த நிலையில் அந்த அமைச்சரை குகன் சக்கரவர்த்தி கொலை செய்கிறார். ஏன் அப்படி செய்தார் என்பதே படத்தின் மீதி கதை.படத்தை நடித்து இயக்கியது மட்டுமின்றி படத்தில் உள்ள 21 கிராப்ட்கைளயும் தனி ஆளாக கையாண்டு கின்னஸ் சாதனைக்கு முயற்சித்துள்ளார் இயக்குநர், நடிகர் குகன் சக்கரவர்த்தி. நடிகராகவும் முடிந்தவரை திரையில் நடிப்புத் திறமையை காட்டியுள் ளார். பொன்னம்பலம் வையாபுரி எம் ஆர் வாசு உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் வேலையை ஓரளவுக்கு செய்துள்ளனர். படத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பாடல்களை போட்டு ரசிகர்களை சோர்வடை வைக்கிறார். அதோடு காட்சிகளில் பல இடங்களில் தடுமாறுவது பலகீனம்.
Next Post