Take a fresh look at your lifestyle.

பாளையத்தமனாக நடிக்கும் சங்கவி

91

பாளையத்தமனாக நடிக்கும் சங்கவி
அஜித் நடித்த அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சங்கவி. தொடர்ந்து விஜய்யுடன் ரசிகன், கோயம்புத்தூர் மாப்ளே போன்ற படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த சங்கவி திருமணமாகி கர்நாடகாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சில சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த சங்கவி, கடந்த சில ஆண்டுகளாக நடிப்புக்கு ஓய்வு கொடுத்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் நடிக்கிறார். விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பாளையத்து அம்மன் என்ற ஆன்மீக தொடரில் லீடு ரோலில் நடிக்க இருக்கிறார்.