Take a fresh look at your lifestyle.

டிசம்பர் 24 ஆம் தேதி ஷாருக்கானின் ‘கிங்’ படம் ரிலீஸ்

105

டிசம்பர் 24 ஆம் தேதி ஷாருக்கானின் ‘கிங்’ படம் ரிலீஸ்
அட்லி இயக்கிய ‘ஜவான்’ படத்திற்கு பிறகு ‘டங்கி’ படத்தில் நடித்த ஷாருக்கான் தற்போது ‘கிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை ஏற்கனவே அவரை வைத்து ‘பதான்’ படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தில் சுகானா கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராப்,ராணி முகர்ஜி உட்பட பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். இப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஆக்சன் கதையில் உருவாகி வரும் இந்த கிங் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லில் நிறுவனம் தயாரிக்கிறது.