அம்மா படத்தை அகற்றுவாயா? என்று அம்மா கேட்டதும்…
எனது வளர்ப்புத் தாயான ஜெயலலிதாவின் படத்தை எனது அலுவலகத்திலிருந்து என்னால் எடுக்க முடியாது, எனவே திமுக-வில் இணையும் முடிவை கை விடுகிறேன் . அது மட்டுமல்ல அரசியல் பொது வாழ்க்கையில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என்று ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் குன்னம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஆர் .டி. ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கண்ணீருடன் தெரிவித்தார் வருகின்ற 26 ஆம் தேதி திமுகவில் இணைய போவதாக, இவர் தெரிவித்திருந்த நிலையில் இப்படி ஒரு கண்ணீர் பேட்டி