Take a fresh look at your lifestyle.

அர்ஜூன் தாஸ் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

145

அர்ஜூன் தாஸ் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்
அர்ஜூன் தாஸ் நடிப்பில்,அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ள படம் ‘கான் சிட்டி’.இதில் மலையாள நடிகை அன்னா பென் ஹீரோயினாக நடிக்க, யோகிபாபு, வடிவுக்கரசி,குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைக்கிறார். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து ள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது., மங்களூர், சென்னை, மும்பை ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இந்த பர்ஸ்ட்லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது.