கிருஷ்ணா நடிக்கும் “தி மம்மி ரிட்டர்ன்ஸ்”
ஜெய் அமர் சிங் இயக்கத்தில் கிருஷ்ணா நடிக்கும் படம் “தி மம்மி ரிட்டர்ன்ஸ்”. இதில் தேவதர்ஷினி, ஸ்வாதி, கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பியோர்ன், தீபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். பெப்பின் டீ ரைசின் புரொடக்ஷன்ஸ் சார்பில், பி.ஜே.கிஷோர் தயாரித்துள்ள இப்படம், காமெடி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் பொங்கல் அன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் இயக்குநர்கள் விஷ்ணுவர்தன்,ஐ. அகமது ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் படப்பிடிப்பை, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல வருட கோமாவில் இருந்து மீண்டு வரும் தன் தாயை காப்பாற்ற தன் அம்மா வாழ்ந்த 1990 களின் உலகை தன் நண்பர்களுடன் இணைந்து உருவாக்குகிறான் மகன். அதில் நடக்கும் களேபரங்கள் தான் இப்படத்தின் மையக் கதை.
Prev Post